கல்முனை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளர் இராசையா ஸ்ரீவேல்ராஜா
கல்முனை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளரும் வங்கியாளருமான இராசையா ஸ்ரீவேல்ராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
கடந்த சனிக்கிழமை (29.04.2023) அன்று இடம்பெற்ற புதிய இயக்குனர் சபை தெரிவின்போதே இவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
மேலும் இதன் உப தவைராக இராஜகோபால் நடராஜா தெரிவு செய்யப்பட்டதுடன் இவர்களைத் தவிர ஏழு பேர் கொண்ட இயக்குனர் சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
முன்னாள் தலைவர் சுப்பிரமணியம் அரசரெத்தினம், மார்க்கண்டு லோகராஜா , கிருஷ்ணபிள்ளை நாகராஜா, அன்புமணி ராஜினி, நிபோஜனா பற்மராஜா, தவராஜா வினிதா , குணரெட்னம் கேதீஸ் , ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர் .