இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி மனைவியை கொல்ல முயற்சித்த கணவனான வைத்தியர் கைது..!
மனைவிக்கு பலவந்தமாக இன்சுலின் ஊசியை ஏற்றிக் கொலை செய்வதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில் கணவனான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகப்படியான இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டதால் மயக்கமடைந்த வைத்தியரின் மனைவி ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருமணமாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மனைவி, மருத்துவருடன் அடிக்கடி தகராறு செய்து வருபவர் என விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சந்தேக நபரான வைத்தியர் அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை என்பதும் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.