SuperTopAds

வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்த மர்ம நபரால் குத்திக் கொல்லப்பட்ட இளைஞன்...

ஆசிரியர் - Editor I
வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்த மர்ம நபரால் குத்திக் கொல்லப்பட்ட இளைஞன்...

தகராறு காரணமாக காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 24 வயது இளைஞன் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்குள் வைத்து குத்திக் கொல்லப்பட்டுள்ளான். 

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மதவாச்சி - மன்னார் சந்தி பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றுமுன்தினம் (27) மாலை பலரினால் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் 11 ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்டு 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (28) அதிகாலை 05 மணியளவில் பிரிவிற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் இளைஞனின் கழுத்து 

மற்றும் காலில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து உடனடியாகச் செயல்பட்ட மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.