மரண விசாரணை அதிகாரியை மறைந்திருந்து தாக்கிய மர்மநபர்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரியை மர்ம நபர் ஒருவர் மறைந்திருந்து தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வழமையை போன்று அலுவலகத்தை திறக்க முயற்சித்த வேளையில்
மறைந்திருந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தப்பிச்சென்றுள்ள சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.