கழுத்தறுத்து கொல்லப்பட்ட ஆயுள்வேத வைத்தியரான இரு பிள்ளைகளின் தாய்...
ஆயுள்வேத வைத்தியரான இரு பிள்ளைகளின் தாய் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் வீடொன்றின் பின்னால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பகுதியில் வசிக்கும் விக்கிரமாரச்சிகே பிரேமாவதி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை (27) காலை வீடு ஒன்றின் பின்புறம், கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக தகவல் கிடைத்ததனையடுத்து
பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.