ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் வீதியில் கண்டெடுத்த பண பையை உரியவர்களிடம் ஒப்படைத்த சிறுமி...
ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் வீதியில் விழுந்து கிடந்த பையை கண்டெடுத்த சிறுமி அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனையில் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் - சிறிமாபுர மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்விகற்கும் குறித்த சிறுமி, அருகிலுள்ள தனது நண்பியின் வீட்டில் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியோராமாக கிடந்த கைபை ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
வெற்று கைபை என நினைத்த எடுத்த அந்த சிறுமிக்கு, அந்த பணப்பை சற்று கடினமாக இருப்பதால் அதை திறந்து பார்த்தபோது, அதில் நிறைய பணத்தாள்கள் கிடப்பதை அறிந்துகொண்டாள்.
பிறருக்கு உரித்தான பொருட்களை நாம் வைத்திருப்பது தவறு என்பதை சிறு வயதிலிருந்தே பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறுவதை கடைப்பிடித்து வந்த சிறுமி, குறித்த கை பையை உரிமையாளருக்கு ஒப்படைப்பதற்கு உதவுமாறு தனது நண்பியின் தாயாருக்கு கூறியுள்ளார்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னர், அப்பகுதி பிரதேசசபை அதிகாரிகள் முன்னிலையில் கைபை உரிமையாளரான பெண்னிடம் கையளிக்கப்பட்டது.
அவசர பணத்தேவைக்காக பணத்தை கைபையில் வைத்திருந்தபோதே தனது கைபை தவறவிடப்பட்டதாக அப்பெண் தெரிவித்திருந்தார். சிறுமியின் நற்செயலை பாராட்டி, அப்பகுதியிலுள்ள நலன்புரிச் சங்கமொன்று குறித்து சிறுமியை கெளரவித்திருந்தது.