ஓடிக் கொண்டிருந்த ரயிலில் செல்பி எடுக்க முயன்ற 15 வயது சிறுவன் தவறி விழுந்து படுகாயம்..
ரயிலுக்கு வெளியே நின்று செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த 15 வயது சிறுவன் ரயில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளான்.
ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது செல்பி எடுக்கச் சென்ற குறித்த சிறுவன், ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்த சிறுவன் அதே ரயிலில் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் சென்று 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டியில்
தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.