SuperTopAds

யாழ்.நெடுந்தீவு கூட்டுப் படுகொலை சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கூட்டுப் படுகொலை சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..

யாழ்.நெடுந்தீவில் 5 பேர் படுகொலை செய்ய்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதான சந்தேகநபரை 48 மணிநேர பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.

நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்ப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த வீட்டில் கடந்த இரு தினங்கள் தங்கியிருந்த 51 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையானவர்களின் நகைகள், கையடக்க தொலைபேசிகள் என உடமைகள் சில மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்திய பொலிஸார் 48 மணித்தியாலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரினார்.

அதனை ஏற்றுக்கொண்ட மன்று, 48 மணிநேர விசாரணையின் பின் மன்றில் மீண்டும் சந்தேகநபரை முற்படுத்துமாறு பொலிஸாருக்கு பணித்தது.