வியட்நாமில் இருந்து 23 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்தபோது படகு விபத்துக்குள்ளான நிலையல் மீட்கப்பட்டு விஜயட்நாமில் தடுத்துவைக்கப்ப்டிருந்த 23 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஏப்ரல் 19 ஆம் திகதி 23 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.2022 நவம்பரில், 303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற
வியட்நாமியக் கொடியுடன் கூடிய பெரிய படகு வியட்நாம் கடற்பரப்பில் கவிழ்ந்தது. வியட்நாமிய கடலோர பாதுகாப்பு படையினர் விபத்துக்கு உள்ளான குழுவை மீட்டு
அவர்களில் 151 பேர் டிசம்பரில் திருப்பி அனுப்பப்பட்டனர்.