மேலதிக பணி என பாடசாலைக்கு அழைத்து 22 வயதான இளம் ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்த அதிபர் கைது!
பாடசாலையில் மேலதிக பணி உள்ளதாக கூறி இளம் ஆசிரியை ஒருவரை பாடசாலைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 60 வயதான பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட பகுதியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பாடசாலை மூடப்பட்டிருந்தபோது 22 வயதுடைய ஆசிரியையை மேலதிக பணிக்காக பாடசாலைக்கு வரவழைத்தே இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த உடனேயே மினுவாங்கொடை பொலிஸின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவில் பாதிக்கப்பட்ட ஆசிரியை முறைப்பாடு செய்ததனையடுத்து அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சந்தேக நபரான அதிபரிடம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.