யாழ்.கொக்குவில் பகுதியில் போதைப்பொருள் வியாபாரி கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் பகுதியில் போதைப்பொருள் வியாபாரி கைது!

காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் 

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (17) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு தொகுதி கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் 

பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு