இரு பொதுமகன்கள் மீது தாக்குதல் நடத்தி 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது, சார்ஜன்ட் தலைமறைவு..
இருவரை தாக்கி சுமார் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த பண கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் நுகேகொடை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் அவர் தலைமறைவாகி உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலில் ஒருவரை கைது செய்து விசாரிக்கும்போது கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள்
மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் யார் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியானதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.