வர்த்தகர்கள் மீது தாக்குதல் நடத்தி 2 கிலோ தங்கம் கொள்ளை! 8 பொலிஸாரிடம் வாக்குமூலம் பதிவு, விசேட புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை..
இரு வர்த்தகர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களிடமிருந்து தங்கத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று
மோதரை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட 3 பிரிவுகளைச் சேர்ந்த 8 அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இரண்டு வர்த்தகர்களையும் தாக்கி சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான இரண்டு கிலோ தங்கம் கொள்ளையிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
மோதரை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மோதர பொலிஸின் குற்றப் பிரிவின் மூன்று உப பொலிஸ் பரிசோதகர்கள் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் நான்கு பொலிஸ் கான்ஸ்டபிள்களிடம்
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.