SYF - Sri Lanka அமைப்பின் வருடாந்த புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு மற்றும் 8வது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு!

SYF - Sri Lanka அமைப்பின் வருடாந்த புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு மற்றும் 8வது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு!
SYF - Sri Lanka ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் (ஹிஜ்ரி 1444 றமழான் 17) பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வும் வருடாந்த இப்தார்வைபகமும் 8வது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வும் SYF - Sri Lanka அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.ரசான் அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(9) இடம்பெற்றது.
புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸினை தொடந்து கொடியேற்றப்பட்டதுடன் வருடாந்த இப்தார் வைபகமும் 8வது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கண்ணியத்திற்குரிய அஸ்ஸெய்யித் யஹ்யா மௌலானா ஸபீதி, SYF - Sri Lanka அமைப்பின் தவிசாளர் மௌலவி ஏ.எம். அஸ்பான் அல் - கௌஸி, அல்வாஹிதியா அரபுக் கல்லூரியின் தலைவர் எம். எம். சப்ராஸ் மன்சூர், சாய்ந்தமருது மஸ்ஜிதுல் குபா பள்ளிவாயலின் தலைவர் ஏ.ஏ.வஷீர், மஸ்ஜிதுஸ் சலாம் (மயோன் பள்ளிவாயல்) இன் செயலாளர் அப்துல் மஜீத் பொறியியலாளர், ஆசிரியர் அலியார் பைசர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எம்.ஐ.எம்.ரியாஸ் அவர்களும் உலமாக்களும் தரிக்கா முஹிப்பீன்கள் முரீதுகளும் SYF - Sri Lanka அமைப்பின் பொருளாளர் சி.எம் எம்.சப்னாஸ் உப தலைவர் எம்.எம்.முஸ்ரிப் உட்பட அமைப்பின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




















