SuperTopAds

துருக்கி இடிபாடுகளில் இருந்து மீட்ட அதிசய குழந்தை!! -இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன் மீள இணைப்பு-

ஆசிரியர் - Editor II
துருக்கி இடிபாடுகளில் இருந்து மீட்ட அதிசய குழந்தை!! -இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன் மீள இணைப்பு-

துருக்கி நிலநடுக்க கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட அதிசய குழந்தை, இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன் மீண்டும் சேர்க்கப்பட்டது.

தென் - மத்திய துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் கடந்த பெப்ரவரி மாதம் ரிக்டர் அளவு கோலில் 7.8 என்ற அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் 128 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு படையினர், கட்டட இடிபாடுகளில் இருந்து ஆயா (Aya)  என்ற இரண்டு மாத குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.

இடிபாடுகளில் சிக்கி 128 மணி நேரத்திற்கு பிறகும், குழந்தை ஒன்று உயிருடன் இருப்பதை பார்த்தவர்கள், அந்த குழந்தையை கடவுளின் அடையாளம் என்று வாழ்த்தினர்.

மேலும் குழந்தையை அனைவரும் அதிசயம் என்று குறிப்பிட்டனர், ஆனால் நிலநடுக்க கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தையின் தாய் இறந்ததாக வெளியான செய்திகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் 54 நாட்களுக்கு பின் இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன், நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த அதிசய குழந்தை மீண்டும் இணைந்துள்ளது.

தாயும், குழந்தையும் 54 நாட்களுக்கு பின்னஎ இணையும் அந்த தருணத்தை அந்த நாட்டின் குடும்பம் மற்றும் சமூக சேவைகளுக்கான அமைச்சர் டெரியா யானிக் ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார்.