யாழ்.நாவலர் மண்டபத்திலிருந்து யாழ்.மாநகரசபையை வெளியேற்றும் தீர்மானத்திற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கியது யாழ்.மேல் நீதிமன்றம்!
யாழ்.நாவலர் மண்டபத்திலுருந்து யாழ்.மாநகரசபையை வெளியேற்றி இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளிக்கும் பணிப்பிற்கு யாழ்.மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவையிட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு எதிராக யாழ்.மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் தாக்கல் செய்த வழக்கில் யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் ஆஜராகியிருந்தபோதே யாழ்.மேல்நீதிமன்றம் இந்த இடைக்காலக் கட்டளையை பிறப்பித்துள்ளது.