SuperTopAds

கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் மாபெரும் இப்தார் நிகழ்வு

ஆசிரியர் - Editor III
கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் மாபெரும் இப்தார் நிகழ்வு

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் 11வது நோன்பின் இப்தார் நிகழ்வு   சங்கத்தின் தலைவர் எம்.ஜமால்தீன் தலைமையில் கல்முனை சந்தை தொகுதியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது திங்கட்கிழமை (3) இரவு ஆரம்பமானதுடன் குறித்த நிகழ்வில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவினை மெளலவி ஏ.சி.எம் முஹைத்தீன்  மேற்கொண்டார்.

கடந்த வாரம் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்களாக 40ற்கு மேற்பட்டோர் தெரிவு செய்யப்பட்டதையடுத்து இவ் இப்தார் நிகழ்வு அச்செயற்குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் இப்தார் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி,உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அஸீம்,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ.ஏ வாஜீத்,பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹீர்,மாநகர கணக்காளர் கே.எம் ரியாஸ்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜெளஸி,கல்முனை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர்,கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலிஹ்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா உட்பட பெரும்பாலான வர்த்தகர்கள்,வைத்தியர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வுக்கான நன்றியுரை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல் கபீரினால் நிகழ்த்தப்பட்டது.