SuperTopAds

யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகள் உட்பட சுமார் 115 தீவுகளை ஒரு அதிகாரசபையின் கீழ் கொண்டுவர முஸ்தீபு! மகாவலிபோல் மிக ஆபத்தானது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகள் உட்பட சுமார் 115 தீவுகளை ஒரு அதிகாரசபையின் கீழ் கொண்டுவர முஸ்தீபு! மகாவலிபோல் மிக ஆபத்தானது..

இலங்கையை சூழவுள்ள சுமார் 115 தீவுகளை அதிகாரசபையின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். 

யாழ்.திருநெல்வேலியில் இடம்பெற்ற 13வது திருத்தின் சாதக பாதகங்கள் தொடர்பிலான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது, 

மகாவாலி அதிகா சபை பயனுள்ள ஒரு அதிகார சபையாக எவ்வாறு உருவாக்கப்பட்டதோ அதேபோன்று தீவுகளை ஒன்றிணைத்து வலுவுள்ள அதிகார சபை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவு, கச்சதீவு, சிறு தீவு, குறிச்சித் தீவு ஆகிய பல தீவுகள் குறித்த அதிகார சபையின் கீழ் நிர்வாகிக்கப்படும்.18 வருடங்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த வடமாகாண சபை செயற்படுத்தப்பட்டதன் பின்னரும் 

வழங்கப்பட்ட மாகாணசபையை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துஷ்பிரயோகம் செய்வதற்கு உடந்தயாக இருந்தனர். மாகாணசபை கட்டமைப்பை இனப் பிரச்சனைக்கு அப்பால் பிராந்திய அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் ஒரு கட்டமைப்பு. 

உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை நடத்த வேண்டும் என போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் மாகாணசபைத் தேர்தலையாவது நடத்துங்கள் என போராட்டங்கள் எழவும் இல்லை அரசியல்வாதிகள் கேட்கவும் இல்லை.

தற்போது தீவுகளை அதிகாரசபையின் கீழ் கொண்டுவரும் திட்டம் மகாவலி அதிகார சபையிலும் பார்க்க வலுவான திட்டமாகவே அமையும். தீவுகளுக்கான அதிகாரசபை உருவாக்கப்பட்டால் மகாவலியைப்போன்று 

வலுவுள்ள அதிகார சபையாக உருவாக்கம் பெறுவதோடு மாகாணசபை நடைமுறையில் இருந்தாலும் ஆளுநருக்கும் அதிகாரம் கிடையாது அதேபோன்று மாவட்ட செயலகம் பிரதேச செயலகம் எவருக்கும் அதிகாரம் கிடையாது.

ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் மாகாணசபை முறை நடைமுறையில் இருந்த போது 70 ஆயிரம் குடியேற்றங்கள் இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து கந்தளாயிலும் இடம் பெற்றது. ஆகவே தமிழ் மக்கள் இனப்பிரச்சனைக்கு அப்பால் 

பிராந்திய அபிவிருத்தி தம் பக்கம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தேவை எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், 

முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், வட மாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.