யாழ்.இருபாலை சிறுவர் இல்லத்தை சேர்ந்த 3 பேருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு! 13 சிறுவர்களினதும் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்பிக்கவும் பணிப்பு..
யாழ்.இருபாலையில் கிறிஸ்த்தவ மத அமைப்பு ஒன்றினால் நடத்தப்பட்ட சட்டவிரோத சிறுவர் இல்லத்தில் இருந்து 13 சிறுவர்கள் மீட்க்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இல்லத்தில் இருந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இருபாலையில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் உரிய அனுமதி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கோப்பாய் பொலிசார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள் குறித்த இல்லத்தை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டிருந்தனர்.
இதன்போது 13 சிறுவர்கள் மீட்கப்பட்டதுடன் அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் உரியவகையில் உணவு வழங்கப்படவில்லைபோன்ற தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தது. இந்நிலையில் குறித்த இல்லத்தை நடாத்தி சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில்
அங்கு தங்கியிருந்த மூன்று பெண்களை கோப்பாய் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதன்போது மூன்று பெண்களையும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதினமன்ற நீதவான் உத்தரவிட்டதுடன் இல்லத்தில் தங்கியிருந்த 13 சிறுவர்களையும்
வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.