சிறு கடை ஒன்று திடிரென தீப்பிடித்து எரிந்ததில் முழுமையான சேதமடைந்த சம்பவம்
சிறு கடை ஒன்று திடிரென தீப்பிடித்து எரிந்ததில் முழுமையான சேதமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆட்டோ பஸார் சந்தி அருகில் இருந்த வாழைப்பழம் மற்றும் இடியப்பம் விற்கும் கடையில் இன்று மதியம் திடிரென தீப்பிடித்து சாம்பலாகியது.
குறித்த சம்பவம் அறிந்து கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவினரும் கல்முனை தலைமையக பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்று தீயினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த தீ விபத்தினால் கடையில் இருந்த பெறுமதியான பொருட்கள் வாழைப்பழங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.