SuperTopAds

சீனாவில் 30 மில்லியன் பணத்தை மோசடி செய்து விட்டு இலங்கைக்கு தப்பிவந்து தலைமறைவாக இருந்த 28 சீன நாட்டவர்கள் கைது! 5 பேர் பெண்களாம்...

ஆசிரியர் - Editor I
சீனாவில் 30 மில்லியன் பணத்தை மோசடி செய்து விட்டு இலங்கைக்கு தப்பிவந்து தலைமறைவாக இருந்த 28 சீன நாட்டவர்கள் கைது! 5 பேர் பெண்களாம்...

சீனாவில் 30 மில்லியன் பணத்தை மோசடி செய்துவிட்டு இலங்கைக்கு தப்பிவந்து தலைமறைவாக இருந்த 28 சீன பிரஜைகள் சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டிரு்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் பெண்கள் என பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள் மற்றும் பெறுமதியான கைத்தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சீனாவில் இணையத்தில் சுமார் இரண்டு மாதங்களாக இந்த பண மோசடி மேற்கொள்ளப்பட்டதாகவும், சர்வதேச பொலிஸார் வழங்கிய அறிவித்தலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீன தூதரகத்தில் இருந்து மொழிபெயர்ப்பாளர் ஒருவரை வரவழைத்து சந்தேக நபர்களிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்படும் என அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.