மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணியின் சடலம் மீட்பு!
மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவருடைய சடலம் அவரது வீட்டு படுக்கையறையில் இருந்து மீட்க்கப்பட்டிருக்கின்றது.
குறித்த சம்பவம் பெல்மதுல்ல - புலத்வெல்கொட என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது.
சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த திருமதி துஷ்மந்தி அபேரத்ன (40) என்பவரின் சடலம்
அவரது படுக்கையில் காணப்பட்டதாக பெல்மதுல்ல பொலிஸார் தெரிவித்தனர். காலையில் அவரது வீட்டுக்குச் சென்ற பணிப்பெண்
சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.கடந்த 30 ஆம் திகதி இரவு முதல் வழக்கறிஞரின் கணவர் வீட்டில் இல்லை எனவும்
அவர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பில் பணிப் பெண்ணிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.