இன்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலை குறைப்பு! புதிய விலைப்பட்டியல் வெளியானது...

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலை குறைப்பு! புதிய விலைப்பட்டியல் வெளியானது...

இன்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். 

இதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.

ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு