யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் பிரபல போதைப் பொருள் வியாபாரியான பெண் கைது! போதைப் பொருள் வாங்க வந்திருந்த மேலும் 10 பேரும் கைது, ஒருவர் பாடசாலை மாணவன்...

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் பிரபல போதைப் பொருள் வியாபாரியான பெண் கைது! போதைப் பொருள் வாங்க வந்திருந்த மேலும் 10 பேரும் கைது, ஒருவர் பாடசாலை மாணவன்...

யாழ்.பல்கலைகழகத்தை அண்மித்த பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த குறித்த பெண்  நேற்றைய தினம் மாவட்ட குற்றச்சாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வியாபாரியிடம் போதைப் பொருள் வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும் கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு 

போதைப் பொருள் வியாபாரியான பெண் நீண்ட காலமாக போதை பொருள் விற்று வருவமை தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து 

குறித்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு போதை பொருள் வாங்கியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு