வேலைக்கு சென்ற பெண் கொல்லப்பட்டு சடலம் வடிகாலில் வீசப்பட்டிருந்த கொடூரம்!!
வேலைக்குச் சென்றிருந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவருடைய சடலம் வடிகாலில் கிடந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
நேற்று காலை 6.30 மணியளவில் குறித்த யுவதி தனது பணியிடத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் அவரது தொலைபேசி வேலை செய்யாததால்
மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள வடிகான் ஒன்றின் கீழ் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. குறித்த யுவதி ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் படித்து
சில மாதங்களுக்கு முன்பு பட்டம் பெற்றார். இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.