அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பான அறிவிப்பு!
சகல அரச ஊழியர்களுக்குமான ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் ஏப்ரல் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிங்கள இந்து புத்தாண்டை முன்னிட்டு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு
ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.