அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து போராட்டம்!
அனைத்தப் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை எதிர்த்து போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்.நகரில் ஒன்று கூடியவர்கள் தீடீரென பேரணியாக வந்து மத்திய கல்லுாரி முன்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது காணமல்போனோரை விடுதலை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், வன்முறை வேண்டாம், யாழ்ப்பாணத்தை குழப்பாதே போன்ற கோஷங்களை போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் எழுப்பினர்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தின் ஒன்றுகூடியபோதே குறித்த போராட்டம் இடம்பெற்றது.