மகன் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த ஓய்வுநிலை வங்கி முகாமையாளர்..! மகன் கைது...
மகன் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் காத்தான்குடி - கல்லடியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு
எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கடந்த 16ஆம் திகதி தன்னை கிரிக்கெட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டைப் பதிவு செய்த அவர் தனது மனைவி சகிதம் வீட்டைவிட்டு வெளியேறி கல்லடியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.
18ம் திகதி குறித்த விடுதியிலிருந்து வெளியேறிய அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்
21ம் திகதி குறித்த நபர் மரணமடைந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.
இதனையடுத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சகிதம் மரணமானவரின்
வீடு மற்றும் தங்கியிருந்த தனியார் விடுதி போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தையும் பார்வையிட்டு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.