SuperTopAds

17 வயதான மாணவியுடன் ஹோட்டல் அறையிலிருந்த இளைஞன் கைது! 6 வருடங்களாக காதல் உறவாம், மாணவியின் தாய் முறைப்பாடு...

ஆசிரியர் - Editor I
17 வயதான மாணவியுடன் ஹோட்டல் அறையிலிருந்த இளைஞன் கைது! 6 வருடங்களாக காதல் உறவாம், மாணவியின் தாய் முறைப்பாடு...

ஹோட்டல் அறையில் 23 வயது இளைஞனுடன் தங்கியிருந்த 17 வயதான மாணவி ஒருவர் பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளதுடன், 

மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 23 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வேலையில்லாத நபர் என தெரிவிக்கப்படுகிறது. பாடசாலைக்குச் சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என மாணவியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

தனது மகள் சுமார் ஆறு வருடங்களாக இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக அவரது தாய் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பலமுறை எச்சரித்தும் மகள் உறவை நிறுத்தவில்லை எனவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.