14 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு! வீட்டு பணிப்பெண் உட்பட இருவர் கைது..
ஓய்வுபெற்ற பொறியியலாளர் வீட்டிலிருந்து 14 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்ற சம்பவம் சிலாபம் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.
அதே வீட்டில் பணிபுரிந்து வந்த பெண் தனது எஜமானர் வீட்டிலிருந்த 14 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடி விற்பனை செய்தமை தொடர்பில்
சிலாபம் தலைமையக பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபரான பணிப்பெண் தவிர,
அவருக்கு உதவியதாக கூறப்படும் மற்றுமொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.75 வயதான ஓய்வுபெற்ற பொறியியலாளர்
தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்த வீட்டில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.