யாழ்.உரும்பிராய் பகுதியிலுள்ள சிறுவர் இல்லத்திலிருந்த 3 சிறுமிகளை காணவில்லை! கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராய் பகுதியிலுள்ள சிறுவர் இல்லத்திலிருந்த 3 சிறுமிகளை காணவில்லை! கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார்..

யாழ்.உரும்பிராய் பிரதேசத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல்போயுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காணாமல்போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சிறுமிகள் முல்லைத்தீவு மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இந்த சிறுவர் இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக அழைத்து வரப்பட்டதாகவும் 

தெரியவந்துள்ளதுடன், சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு