SuperTopAds

குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு டிரம்ப் முற்றுப்புள்ளி!

ஆசிரியர் - Editor II
குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு டிரம்ப் முற்றுப்புள்ளி!

அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை.

ஆகவே பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படும் நிலை உருவானது.

இந்தநிலையில் அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்த 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டனர்.

அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகள் அடைக்கப்பட்டிருந்தனர். டிரம்பின் இந்நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் ஏற்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

எல்லை வழியாக ஊடுருவும் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைப்பதற்கு அதிபர் டிரம்ப் முடிவு கட்டியுள்ளார்.

இதுதொடர்பான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.