மீண்டும் வெற்றிக் கிண்ணத்தை தட்டித் தூக்கியது மன்னார் புனித லூசியா விளையாட்டு கழகம்

ஆசிரியர் - Editor II
மீண்டும் வெற்றிக் கிண்ணத்தை தட்டித் தூக்கியது மன்னார் புனித லூசியா விளையாட்டு கழகம்

கிளிநொச்சி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் 2023க்கான அமரர் ஜோசப் தோமஸ் ஞாபகார்த்த கிண்ணம் மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு கழகம் வசமானது.

கிராஞ்சி செல்சிட்டி விளையாட்டு கழகம் நடாத்தும் தேர்ந்து எடுக்கப்பட்ட 8  அணிக்ளுக்கு இடையிலான அணிக்கு 11 பேர் கொண்ட 25 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் மன்னார் புனித லூசியா விளையாட்டு கழகம்  வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.

முதலாவதாக மன்னார் பள்ளிமுனை புனித லூசியா வி.க அணிக்கும், பூனகரி வலைப்பாடு புனித ஆன்ஸ் வி.க அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் 4 - 0 என்ற கோல் கணக்கில் மன்னார் பள்ளிமுனை புனித லூசியா வி.க அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆரையிறுதிப் போட்டியில் தேவன்பிட்டி சேவியர் வி.க அணியை எதிர்த்து 3 - 0 என்ற கோல் கணக்கில் மன்னார் பள்ளிமுனை புனித லூசியா வி.க அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடந்த இறுதி போட்டியில் மன்னார் புனித லூசியா வி.க பள்ளிமுனை அணி, செல்சிட்டி வி.க கிராஞ்சி அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.

மன்னார்  பள்ளிமுனை புனித லூசியா வி.க அணியின் சிறந்த கோல் காப்பாளர் சதுசியனும், தொடராட்ட நாயகன் நிலுக்சன் தெரிவாகியிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு