SuperTopAds

ஒரு மலைப் பாம்பு மனிதரை எப்படி விழுங்கும்?

ஆசிரியர் - Editor II
ஒரு மலைப் பாம்பு மனிதரை எப்படி விழுங்கும்?

ஒரு இந்தோனீசிய பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்றுவிட்டது என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இது நம்பமுடியாத அரிதான சம்பவமாக இருந்தாலும், கடந்த ஒரு வருடத்தில் இந்தோனீசியவில் மலைப்பாம்பினால் ஏற்பட்ட மரணங்களில் இது இரண்டாவதாகும்.

54 வயதான வா டிபா எனும் பெண், சுலவேசி மாகாணம் முனா தீவில் உள்ள தனது காய்கறி தோட்டத்திற்கு சென்றபோது காணாமல் போனார்.

ஒருநாள் கழித்து அப்பெண்ணின் காலணியும், அவரின் கத்தியும் கண்டெடுக்கப்பட்டது. 30 மீட்டர் அருகில் வீங்கிய வயிருடன் ஒரு மிகப்பெரிய மலைப் பாம்பு படுத்து கிடந்தது.

''காணாமல் போன பெண்ணை மலைப்பாம்பு விழுங்கியதாக மக்கள் சந்தேகித்தனர். அதனால் அப்பாம்பைக் கொன்றுவிட்டனர்'' என்கிறார் உள்ளூர் காவல்துறை அதிகாரி ஹம்கா.

''பாம்பின் வயிறு அறுக்கப்பட்டது. வயிற்றின் உள்ளே அப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.''

பெரும் கூட்டத்தின் முன்பு, பாம்பின் வயிற்றில் இருந்து பெண்ணின் உடல் எடுக்கப்படும் காணொளி இந்தோனீசிய சமூக வலைத்தளத்தில் பரவியது.

இங்குக் கண்டெடுக்கப்பட்ட மலைப்பாம்பு தென்கிழக்கு ஆசியப் பகுதியில் காணப்படும் வகையைச் சேர்ந்தது. இதன் நீளம் 32 அடி வரை இருக்கும். இது மிகவும் பலம் மிக்கது. பதுங்கியிருந்து தனது இரையைத் தாக்கும் இப்பாம்பு, இரையை சுற்றி முறுக்கி நசுக்கும்.

இதனால், சில நிமிடங்களில் இந்த பாம்பிடம் சிக்கிக்கொண்டவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பார்கள்.

தனது இரை முழுவதையும் இந்த பாம்பு உண்ணும். பெரிய இரைகளைக் கூட முழுவதுமாக விழுங்கும் அளவுக்கு இதன் தாடை மிகவும் நெகிழ்வானது.

மனிதர்களை மலைப்பாம்புகள் உண்ணும்போது, ''மனிதர்களின் தோல்பட்டை எளிதில் உடையாது என்பதால், தோல்பட்டைக்கு மேல் மனிதர்களில் உடல் பாம்பின் வாய்க்கு உள்ளே செல்வது கடினமானதாக இருக்கும்'' மலைப்பாம்பு குறித்த ஆராய்ச்சியாளர் மேரி-ரூத் லோ கூறுகிறார்.

பெரும்பாலான மலைப்பாம்புகள் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. எனவே, அரிதாகவே முதலைகள் போன்ற ஊர்வனவற்றைச் சாப்பிடும் என்கிறார் லோ.

பொதுவாக அவை எலிகள் மற்றும் பிற சிறிய விலங்குகளை உண்கின்றன. ஆனால், ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்குப் பிறகு, எலிகளை மலைப்பாம்பு குறி வைக்காது. ஏனெனில், எலிகளிடம் இருந்து கிடக்கும் கலோரி பாம்புக்குப் போதாது.

மலைப்பாம்பு எவ்வளவு வளருகிறதோ, அதன் இரையும் பெரியதாக இருக்க வேண்டும். இதனால் பன்றி, மாடு போன்ற பெரிய விலங்குகள் பாம்புக்கு இரையாகும்.

தனக்கு ஏற்ற பெரிய இரை கிடைக்கவில்லை என்றால், பெரிய இரையை காணும் வரை நீண்ட காலத்திற்கு சிறிய இரையை சாப்பிட்டே இப்பாம்புகள் உயிர்வாழும்.

இல்லை. 2002-ல் தென் ஆஃப்பிரிக்காவில் 10 வயது சிறுவனை ஒரு மலைப்பாம்பு விழுங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் இதே சுலவேசி மாகாணத்தில், ஒரு விவசாயியை 7 மீட்டர் நீளமுள்ள ஒரு பாம்பு விழுங்கியது.

மேற்கு சுலவேசி பனை எண்ணெய் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 25 வயதான ஒரு நபரை மலைப்பாம்பு விழுங்கியது. பாம்பின் வயிற்றை அறுத்து அந்த நபரின் உடலை மக்கள் வெளியே எடுத்தனர்.

கடந்த வருடம் இந்தோனீசியாவின் சுமத்ரா மாகாணத்தில், பனை எண்ணெய் தோட்டத்தில் இருந்த ஒரு நபரை 7.8 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு தாக்கியது. பலத்த காயங்களுடன் அந்த நபர் தப்பினார்.

மனிதர்களை மலைப்பாம்பு விழுங்கியதாக சொல்லப்பட்ட முந்தைய கூற்றுகள் பலவற்றை உறுதிப்படுத்துவது கடினமான ஒன்றாக உள்ளது. இந்த சம்பவங்கள் தொலைதூரப் பகுதிகளில் நடந்தவையாக உள்ளன. மேலும் இவற்றுக்கு நம்பகமான சாட்சிகள் இல்லை.

பிலிப்பைன்ஸில் பத்து வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்ட ஆதிமனிதனைப்பற்றிய ஆராய்ச்சியாளரான தாமஸ் ஹெட்லாண்ட், ஒரு கட்டத்தில் கால்வாசி பழங்குடியின ஆண்கள் மலைப்பாம்புகளால் தாக்கப்பட்டனர் என்கிறார்.

இந்தோனீசியாவின் பாரிஜியா பல்கலைக்கழகத்தின் பாம்பு நிபுணர் நியா கர்னியாவான்,'' மலைப்பாம்புகள் அதிர்வு, சத்தம் மற்றும் விலக்குகளின் வெப்பம் இருக்கும் பகுதிகளை தவிர்க்கும். எனவே மனிதக் குடியிருப்பு இருக்கும் பகுதிகளுக்கு மலைப்பாம்புகள் செல்லாது,'' என்கிறார்.

பாம்பு