யாழ்.மாவட்ட பாடசாலைகளில் சூரிய மின்கல பயன்பாடு குறித்து ஆராய சீன குழு வருகை...
யாழ்.மாவட்ட பாடசாலைகளில் சூரிய மின்கலத்தை பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு சீன குழு ஒன்று யாழ்.வருகை தந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சீனக் குழு யாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் சிலவற்றிற்கு விஜயம் செய்து சூரிய மின்கலத்தை பாடசாலைகளில் நிறுவுவது தொடர்பில்
நேரடியாக கள விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. தீவகப் பகுதிகளில் இந்தியா உதவி திட்டத்தின் கீழ் புதுப்பிக்க சக்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் கரையோரப் பாடசாலைகளில் சீனா சூரிய மின்கலத்தை நிறுவுவது தொடர்பில் ஆராய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.