SuperTopAds

அரசாங்கம் தான் வழங்கிய உறுதி மொழிகளையே மீறுகின்றது, வேலையற்ற பட்டதாாிகள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
அரசாங்கம் தான் வழங்கிய உறுதி மொழிகளையே மீறுகின்றது, வேலையற்ற பட்டதாாிகள் குற்றச்சாட்டு..

அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிப்படி 5 ஆயிரம் பட்டதாாிகளுக்கு உடனடி நியமனத்தை வழங்கிய பின்னா் அடுத்தகட்ட நோ்முக தோ்வை நடாத்தும்படி கேட்டு வேலையற்ற பட்டதாாிகள் இன்று காலை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கூடி கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளதுடன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்றையும் நடாத்தியுள்ளனா். 

இது குறித்து பட்டதாாிகள் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,  யூலை ஐந் தாம் திகதி முதற்கட்டமாக 5 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதாக வாக்குறுதியளித்ததுடன் அடுத்த கட்டமாக 15 ஆயிரம் பேருக்கு நேர்முக தேர்வு நடாத்துவதாக தீர்மானித்திரு ந்தது. ஏற்கனவே 57 ஆயிரம் பட்டதாரிகள் இந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டிருந்தோம். 

இதற்கு ஒரு சரியான முடிவு கூறாமல், அரசு நினைத்ததை செய்து வருகின்றது. சரியான பொறிமுறையின் கீழ் தான் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை மறுபடியும் மறுபடியும் கோரி வருகின்றோம். இதனை அரசு போருட்படுத்தாமல் 5 ஆயிரம் பேருக்கு நியமனங்களையும், மீண்டும் இரண்டாவது தடவையாக நேர்முக தேர்வை நடாத்த தீர்மானித்துள்ளனர்.

இது ஒரு பாரதூரமான விடயமாக காணப்படுவதோடு பல பட்டதாரிகள் பாதிக்கப்படும் நிலையம் காணப்படுகின்றது. ஆகவே அனைத்து பட்டதாரிகளது நலனை கருத்திற் கொண்டு சரியான ஒரு தீர்வை வழங்க வேண்டும். என வலியுறுத்தியே இந்த கவனயீ ர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எமது பிரச்னைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் இந்த போராட்டமானது தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படும். 

எமது பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்கள் இது தொடர்பில் அக்கறையுடன் செயற்படுவதாக எமக்கு தெரியவில்லை, பல பாராளுமன்ற உறுப்பினர்களை பல்வேறு தடவைகள் சந்தித்த போதிலும் எமக்கான தீர்வை அவர்கள் பெற்று தரவில்லை. ஆகவே தான் இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றனர்.