கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான சிகிச்சை வசதி இன்மையால் நோயாளா்கள் அவதி..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான சிகிச்சை வசதி இன்மையால் நோயாளா்கள் அவதி..

கிளிநொச்சி பொது மாவட்ட வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்தச்சுத்திகரிப்பு மற்றும் சிகிச்சைப்பிரிவு, என்பன ஆரம்பிக்கப்படாமையினால் இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டிய சிறுநீரக நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வெளிமாவடட வைத்தியசாலைகளுக்குசசென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை காணப்படுகின்றது.

களிநெசர்சி மாவட்டத்தினது மக்களுக்கும் ஏனைய அயல் பிரதேசங்களான மல்லாவி, வவுனிக்குளம், விசுவமடு, உள்ளிட்ட பிரதேசங்களில்வாழுகின்ற சுமார் இரண்டு இலட்சம் வரையான மக்களுக்கு மருத்துவத்தேவையை வழங்குகின்ற ஒரு மாவட்ட பொதுவைததியசாலையாக காணப்படுகின்ற கிளிநொச்சி வைத்தியசாலையில் இருக்கவேண்டிய சிகிச்சைப்பிரிவுகள் பல இது வரை ஆரம்பிக்கப்படாமை 

மற்றும் போதிய வசதிகள் இன்மையால் இங்கேசிகிச்சை பெற நோயாளர்கள் சொல்லனத்துன்பங்களுக்;கு மத்தியில்; வெளிமாவடட வைத்தியசாலைகளுக்கு அதிக பணத்தையும் நேரத்தையும செலவழித்து வெளிமாவட்ட வைத்தியசாலைகளில் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை காணப்படுகின்றது.

வடமாகாணத்தின் மன்னார்மாவட்ட பொதுவைத்தியசாலை, வவுனியா மாவட்ட பொது வைத்த்தியசாலை, முல்லைத்தீவு வைத்தியசாலை, மற்றும் செட்டிகுளம ஆதார வைத்தியசாலை உள்ளிடட வைத்தியசாலைகளில் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்தச்சுத்திகரிப்பு மற்றும் சிகிச்சைப்;பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு சிறுநீரக நோயாளிகளுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அதிக சனத்தொகை கொண்;;ட மாவட்டத்தில் அமைந்;திருக்கின்ற கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இதுவரை இந்த இரத்த சுத்திகரிப்பு, மற்றும் சிகிச்சைப்பிரிவு என்பன ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் வெளிமாவட்ட வைத்தியசாலைக்குச்சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலைகாணப்படுகின்றது.

ஏற்கனவே கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் குறித்த சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்;கும பொருட்டு சிறுநீரக நோயாளர்;களுக்கான இரத்தச்சுத்திகரிப்பிற்குரிய மூன்று இயந்திரங்கள் வழங்கப்பட்டு அவை பயன்படுத்தப்படாத நிலையில் நீண்டநாட்களின் பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டன.

தற்போது மீண்டும் இரண்டு இரத்த சுத்திகரிப்பு  இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளபோதும், இதுவரை இந்த சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்படவில்லை. குறிப்பாக, வடமாகாணத்தில் உள்;ள பிரதேசமற்றும் ஆதார வைத்தியசாலைகளிலும் இந்த சிகிச்சைப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும், ஒரு மாவட்ட வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படாதுள்ளது. 

மத்திய மற்றும் மாகாண அரசுகளினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை புறக்கணிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது, மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டிய சிறுநீரக நோயாளர்கள் அதிக தூரம் பயணம் செய்யமுடியாத சிறுநீரக நோயாளர்களை அதிக தூரங்களிற்கு பயணம் செய்து பெருந்தொகைப்பணததையும் 

நேரத்தையும் செலவழித்து சிகிச்சை பெற வேண்டிய நிலையினை மாற்றி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  சிறுநீரக நோயாளிகளுக்;களுக்கான சிகிச்சை மற்றும் ஏனைய சிகிச்சைப்பிரிவுகளை ஆரம்பிக்க மத்திய மாகாண அமைச்சுக்கள் நடவடிக்கைஎடுக்கவேண்டும் என பல்வேறு தரப்புக்களும் கோரியுள்ளனர்.

நேற்று முன்தினம் (18-06-2018) கிளிநொச்சி விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சிறுநீரக நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் ஆயிரம் குடும்பங்களுக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை வழங்கியமையும் இஙகு குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு