அடுத்தடுத்து அணு ஆயுதங்களை தாங்கிய ஏவுகணை சோதனை!! -எதிரி நாடுகளை அதிரடியாக அச்சுறுத்தும் வடகொரியா-

ஆசிரியர் - Editor II
அடுத்தடுத்து அணு ஆயுதங்களை தாங்கிய ஏவுகணை சோதனை!! -எதிரி நாடுகளை அதிரடியாக அச்சுறுத்தும் வடகொரியா-

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகின்றது வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல வருடங்களாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. 

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை ஒரேநாளில் அடுத்தடுத்து நான்கு ஏவுகணைகளை ஏவி வடகொரியா அதிரடி சோதனை நடத்தியுள்ளது. 

வாஷிங்டனில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் அதற்கு பதிலடியாக வடகொரியா இந்த ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது. 

அடுத்தடுத்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு