சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு
ஆசிரியர் - Editor III
சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு
சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) குழுவினரால் வியாழக்கிழமை(22) முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வழிகாட்டல்களுக்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் போசாக்கு அளவிடப்பட்டு உடற் திணிவுச் சுட்டெண் (BMI)கணிப்பு ,குருதி அழுத்தம்,இரத்த சீனி அளவு,இடுப்புச் சுற்றளவு, உயரத்திற்கேற்ற நிறையின் அவசியம் தொடர்பான கருத்தாடல்களுடன் உத்தியோகத்தர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.