SuperTopAds

அரசசார்பற்ற நிறுவனங்கள் , மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைப்பு முறையில் செயற்பட வேண்டும்

ஆசிரியர் - Editor II
அரசசார்பற்ற நிறுவனங்கள் , மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைப்பு முறையில் செயற்பட வேண்டும்

அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றக் கூட்டமானது, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அக் கூட்டத்தை மாவட்ட செயலர் கருத்து தேடிவிக்கையில், 

அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத் திட்டத்திற்கு முதற்கண் நன்றியினைத் தெரிவிக்கிறேன்.

குறைநிரப்பு வேலைகளை நிரப்புவதற்காகவே அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட்டு வருகிறது.

அரசசார்பற்ற நிறுவனங்களின் அரசாங்கத்தின் நடைமுறைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன்  இணைப்பு முறையில் செயற்படுவதன் மூலம் வினைத்திறனாக செயற்பட்ட முடியும் என மாவட்ட செயலர் தெரிவித்ததுடன் , ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்ந்து உரிய அறிவுத்தல்களையும் வழங்கினார். 

இக் கலந்துரையாடலில்  மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டிருந்தார்கள்.