ஆப்கன் பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்த தடை!! -தலிபான்கள் உத்தரவு-
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய முதலே பெண்களுக்கு எதிராக கடும் சட்டதிட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதை அவர்கள் தடை செய்துள்ளனர்.
முஸ்லீம்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகள் உருவாக்கியதுதான் கருத்தடை சாதனங்கள். இவற்றை இனி பெண்கள் பயன் படுத்தக் கூடாது.
மருந்தகங்களில் கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.