உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறை ஒன்றை பரிந்துரைப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு வடக்கில் பல்வேறு தரப்புகளுடன் சந்திப்பு...

ஆசிரியர் - Editor I
உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறை ஒன்றை பரிந்துரைப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு வடக்கில் பல்வேறு தரப்புகளுடன் சந்திப்பு...

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறை ஒன்றை பரிந்துரை செய்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தவிசாளர் தலைமையிலான குழு பாதிக்கப்பட்ட தரப்புக்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். 

மேற்கண்டவாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் கூறியுள்ளார். வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தலைமையிலான குழு உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு 

ஏதுவான பொறிமுறையை பரிந்துரைப்பதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அரசியல் தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். குறித்த கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோகினி மாரசிங்க, 

செயலாளர் மற்றும் ஆணைக்குழுவின் சட்ட குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் இந்த சந்திப்பின்போது 

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு வழங்க தன்னார்வ சமய நிறுவனங்களை ஒருங்கிணைப்பது தொடர்பிலும், அதற்கான பொறிமுறை தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தலைமையிலான குழு ஆராய்ந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு