தபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...

ஆசிரியர் - Editor I
தபால் ஊழியர்களின் போராட்டத்தால் குவிந்துள்ள கடிதங்கள், வறுமை நிவாரணக் கொடுப்பனவுகள் பெறமுடியாது சிரமம்...



தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் 9 ஆவது நாளாக தொடரும் வரும் வேலை நிறுத்தப் போராட்டங்களால் 15 இலட்சத்துக்கு மேற்பட்ட கடிதங்கள் தேங்கிக்கிடப்பதுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு தபால்கள் பெருந்தொகையாக குவித்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப் போராட்டத்தில் 26 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் தபால் திணைக்களத்திற்கு பெருந்தொகையில் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை பகிஸ்கரிப்பால் சமூக சேவைகள் திணைக்களத்தின் வறுமை நிவாரணக் கொடுப்பனவுகளைக்கூட பெற முடியாதுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொதுசன மாதாந்த உதவிப்பணம், நோய் உதவிக் கொடுப்பனவுகள்,70 வயதை அடைந்த முதியோர்களுக்கான 1900 ரூபா கொடுப்பனவு ஆகியவற்றைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏழ்மை நிலையில் உள்ள தமது கொடுப்பனவுகளை வழங்குவதற்குரிய மாற்று வழிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை தமது கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளதால், மத்திய அஞ்சல் பரிமாற்றத்தின் முன்னால் இன்று முற்பகல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

தமது தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஏனைய தொழிற்சங்கத்தினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று பிற்பகல் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு