தமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களிடம் என்னை கெட்டவனாக காண்பிக்க முயற்சிக்கிறீா்கள், அமைச்சரவை கூட்டத்தில் கொதித்த ஜனாதிபதி..

தமிழ் மக்கள் மத்தியில் என்னைக் கெட்டவனாகக் காண்பிப்பதற்கு நீங்கள் முயற்சிக்கின்றீர்கள். போரில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்கவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நானே நிராகரித்தேன் என்று கூறியுள்ளீர்கள் தமிழ் ஊடகங்களும் என்னை மிக கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுந்தொணியில் கருத்து தெரிவித்தார்.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று சமர்ப்பித்தார். இழப்பீடுகளை ஒன்றாக அனைவருக்கும் வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்திருக்கின்றார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுந்தொணியில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரவைப் பத்திரம் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டபோது நானே நிராகரித்தேன் என்று கூறியுள்ளீர்கள். நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று அறிவித்துள்ளீர்கள் இப்படி தமிழ் மக்கள் மத்தியில் எனக்கு இதனூடாக கெட்டபெயரை வாங்கித் தருவதற்கு முயன்றுள்ளீர்கள். 

கடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டபோது நீங்கள் தான் அதனை நிராகரித்தீர்கள். அவ்வாறு நிராகரித்துவிட்டு நான் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளீர்கள் தமிழ் ஊடகங்கள் என்மீது கடும் குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளன. இவ்வாறு செயற்படாமல் துரிதகதியில் செயற்பட்டு இழப்பீடுகளை வழங்கும் வகையில் இந்த அமைச்சரவைப்பத்திரத்தை ஆராய்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று கடும் கோபத்துடன் அமைச்சவைப் கூட்டத்தில் தெரித்துள்ளார்

கடந்தவாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சுவாமிநாதனால் கொண்டுவரப்பட்ட இழப்பீட்டுக்கான நிதி வழங்கும் யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டது குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன அதற்கு பதிலளித்தார்.

 இதன்போது முன்னாள் போராளிகளுக்கு உதவிகளை வழங்கும் அமைச்சர் சுவாமிநாதனால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதியே நிராகரித்தார் முன்னாள் புலிகளுக்கு நிதி உதவிசெய்வது புலிகளை ஆதரிப்பதற்கு சமம் என ஜனாதிபதி தெரிவித்தாக ராஜித தெரிவித்திருந்தார். கிளிநொச்சியில் நேற்று முன்தினம் ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த விடயத்தை ஜனாதிபதி முன்னிலையிலேயே உரையாற்றிருந்ததுடன் ஜனாதிபதியின் செயற்பாடு மனவருத்தத்தை தருகின்றது என்றார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி நேற்றைய கூட்டத்தில் மங்கள சமரவீரவே அமைச்சரவைப் பத்திரத்தில மாற்றங்கள் செய்யவேண்டும் என் சொல்லிவிட்டு ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரத்தைத நிராரித்துள்ளார், தான் சொல்லாததை சொல்லியுள்ளதாக ஜனாதிபதி நேற்றைய கூட்டத்தில் பிரஸ்தாபித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு