இடைத்தங்கல் முகாம்கள் இயங்கிய காணிகளை படையினாிடமிருந்து மீட்டுதருமாறு ஜனாதிபதியை கோரவுள்ள கூட்டமைப்பு..
2009ம் ஆண்டு போர் நிறைவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த இடைத்தங் கல் முகாம்கள் அமைந்திருந்த காணிகளில் படையினர் ஹோட்டல்கள் மற்றும் விவசாய பண் ணைகளை அமைத்திருக்கும் நிலையில், மேற்படி காணிகளை மீட்டு தருமாறு ஜனாதிபதியைக் கோருவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு தீர்மானம் எடுத்திருக்கின்றது.
இறுதிப் போர் நிறைவடைந்த பின்னர் இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்காக வவுனியா மாவட்டத்தில் பல இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேற்படி முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்கள் பின்னர் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். இத னையடுத்து இடைத்தங்கல் முகாம்கள் அமைந்திருந்த காணிகளை ஆக்கிரமித்துள்ள
படையினர் அங்கு பாரிய ஹோட்டல்களையும், விவசாய பண்ணைகளையும் அமைத்துள்ளனர். இந்த காணிகளை காணி அற்ற மக்களுடைய குடியேற்றத்திற்காக பயன்படுத்தவேண்டும். ஆனாலும் படையினர் மேற்படி காணிகளை விடுவிப்பதற்கு விருப்பமற்றிருக்கும் நிலையில் அவற்றை விடு விப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு நடாத்தப்படவேண்டும். என நேற்று கொழும்பில்
நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்ப ட்டிருக்கின்றது.