SuperTopAds

வடக்கில் தீவிரமடையும் சிங்கள குடியேற்றங்கள், ஜனாதிபதியை உடன் சந்திக்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயா்மட்டம்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் தீவிரமடையும் சிங்கள குடியேற்றங்கள், ஜனாதிபதியை உடன் சந்திக்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயா்மட்டம்..

முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங் கள் குறித்தும், அவற்றினால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் பூரண மான ஆதாரங்களுடன் கூடிய ஆவணம் ஒன்றை தயாரித்து 30ம் திகதிக்குள் ஜனாதிபதியை சந்தித்து குறித்த ஆவணத்தை  கையளிக்க கூட்டமைப்பு உயர்மட்டம் தீர்மானித்திருக்கிறது.  

முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் எல்லை கிராமங்களில் இடம்பெற்றுவரும் திட்டமிட் ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் வடமாகாணத்தில் உள்ள காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் நாடாளுமன் ற உறுப்பினர்கள் குழு கொழும்பில் நேற்று காலை 10.30 மணிக்கு கூடியிருந்தது. மேற்படிக்

கூட்டத்திலேயே இத் தீர்மானம் கூட்டமைப்பின் உயர்மட்டத்தினால் எடுக்கப்பட்டிருக்கின்ற து. இக்கூட்டத்தில் மகாவலி அதிகாரசபையின் எல் வலயம், கே வலயம் மற்றும் ஜே வலய த்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்தும், 

மேற்படி குடியேற்றங்களினால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஒட்டுமொத்தமாக இவ்வாறான குடியேற்றங்களால் வடமாகாணத்தில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பா திப்புக்கள் குறித்தும் தெளிவாக ஆராயப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் சிங்கள குடியே ற்றங்கள் இடம்பெற்றுவரும் பகுதிகள், அந்த குடியேற்றங்களினால் பறிக்கப்பட்டுள்ள தமிழர்க

ளுடைய காணிகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இதர பாதிப்புக்கள் குறித்து பூரணம hனதும், ஆதரங்களுடன் கூடியதுமான அறிக்கை ஒன்றை தயாரிப்பதாக தீர்மானம் எடுக்கப்ப ட்டது. இதனை தொடர்ந்து மேற்படி அறிக்கையை தயாரிப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக எம்.ஏ.சுமந்திரன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, மற்றும்

வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனின் தனிப்பட்ட செயலாளரும், முன்னாள் அரச அதிபருமான சண்முகம் மற்றும் பே ராசிரியர்கள், ஓய்வு பெற்ற காணி ஆணையாளர்கள், அரச அதிகாரிகள் சிலர் உள்ளடங்கலாக குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி குழு வரைபடங்கள், ஆதாரங்களுடன் தெளி

வானதும், பூரணமானதுமான ஆவணம் ஒன்றை தயாரிக்கவேண்டும். எனவும் அந்த ஆவண த்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறு ப்பினர்கள் உள்ளடங்கிய குழு இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதியிடம் நேரில் கையளித்து விடயங்களை தெளிவுபடுத்தவேண்டும். எனவும் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்ப

ட்டிருக்கின்றது. மேலும் இக் கூட்டத்தில் எதிர்கட்சி தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பி ன் தலைவருமான இரா.சம்மந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, ஈ.சரவணபவன் தமிழரசு கட்சியின் த லைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எஸ்.சிவநேசன், ஆகிய 8 நாடாளும

ன்ற உறுப்பினர்களும், வடமாகாணசபை சார்பில் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் பேராசிரியர்கள், அரச அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட் டம் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.