நம்மவர்கள் அனைவரும் கட்டாயமாகப் பார்க்கவேண்டிய ஈழத்தின் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

ஆசிரியர் - Admin

வெந்து தணிந்தது காடு அற்புதமான ஒரு படைப்பு. கடைசி வரை கதைக்குள் ரசிகர்களை வைத்திருந்தார் இயக்குனர். ரணகளத்திலும் ஒரு கதகதப்பு என்பதாக சில நகைச்சுவைக்காட்சிகளை சரியான இடங்களில் செருகியிருக்கிறார். காதலும் உள்ளது. இறுதி யுத்தகால அனுபவங்களை அறிந்து கொள்ள மீட்டுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம். ஒரு பங்கரும் அதைச்சுற்றியிருந்த 3 கொட்டில்களுக்குள்ளேயே இ்த்தனை பெரிய கதை உள்ள நிலையில் இன்னும் பல கதைகள் சொல்லப்பட வேண்டும். தற்போதுள்ள இயக்குனர்களில் அதனை சொல்வதற்கு பொருத்தமான இயக்குனராக மதிசுதாவை பார்க்கின்றேன். 

கதைவசனம் கதைக்களம் முழுக்க முழுக்க எங்கள் கடந்தகால நிகழ்கால வாழ்வியலுடன் பொருந்துவதாக இருந்தது.  எமது போராட்ட வரலாற்றை எந்தவகையிலும் பாதிக்காமல் அப்படியே எம் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். இன்னும் ஒரு மணித்தியாலம் கூடுதலாக எடுத்திருக்கலாமே என்ற கவலையுடன் எமது வரலாறை அடுத்த சந்ததிக்கு கடத்திசெல்லக்கூடிய கலைஞர்கள் வாழும் தேசம் இது என்ற மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன். 

கதையில் எந்தவித தொய்வுமின்றி உள்ளதை உள்ளபடி திரையில் கொண்டு வந்துள்ளார். குறிப்பாக படத்தின் முதன்மைக்கதாபாத்திரமான பார்வதி அம்மா மிகச்சிறப்பாக செய்திருக்கின்றார். தொடங்கியது முதல் இறுதி வரை அவர்தான் கதாநாயகி.  இந்த வயதில் அவரது நடிப்பு அபாரமானது. சக நடிகர்களும் சளைத்தவர்களல்லர். இன்னும் நான் படத்தில் இருந்து மீளவில்லை. 

சொல்லப்படாத நிறைய கதைகள்  தொடர்ந்து சொல்லப்படவேண்டுமாயின் இதனை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அனைவரும் திரண்டு சென்று பாரக்க வேண்டிய ஈழத்தின் திரைப்படம். வெந்து தணிந்தது காடு.

Thanks : Thangarajah Thavaruban.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு