120 ஏக்கா் காணியை விடுவிக்க அரச அதிபா்களுக்கு உத்தரவிட்டாா் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா..

ஆசிரியர் - Editor I
120 ஏக்கா் காணியை விடுவிக்க அரச அதிபா்களுக்கு உத்தரவிட்டாா் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா..

கிளிநொச்சிக்கு நேற்றைய தினம் வருகை தந்த ஜனாதிபதி யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , முல்லைத்தீவு ஆகிய மாவட்டச் செயலாளர்களையும்  சந்தித்த வேளையில் 120 ஏக்கர் நிலம் விடுவிப்பிற்கான அனுமதிகளையும் வழங்கினார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற  சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் நோக்கில் வருகை தந்துள்ள ஜனாதிபதியே நேற்றைய தினம் 3 மாவட்ட செயலாளர்களையும் சந்திந்து கலந்துரையாடினார். 

இதன்போதே மேற்படி நில விடுவிப்பிற்கான உத்தரவும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அலம்பில் பிரதேசத்தில் உள்ள  52 ஏக்கர் நிலம் கையளிக்கப்பட்டது. இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 8 ஏக்கரும் 

யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பகுதியில் 70 ஏக்கர் நிலமும் விடுவிப்பதற்கான உத்தரவு உடனடியாகவே பிறப்பிக்கப்பட்டு அதற்கான நிலங்களும் விடுவிக்கப்பட்டன. இதில் யாழில் விடுவிக்கம்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் ஜே / 254 பலாலி வடக்கில் 17 ஏக்கரும் , 

ஜே. 245 வசாவிளான் மேற்குப் பகுதியில் 12 ஏக்கரும் ,ஜே/ 249 தையிட்டி வடக்கு பகுதியில் 9 ஏக்கர் நிலமும் விடுவிக்கப்பட்டதோடு ஜே/ 244 வசாவிளான் கிழக்குப் பிரதேசத்தில் 10 ஏக்கர் நிலமும் ஜே/ 252 பலாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் 13.5 ஏக்கரும் ஜே/ 250 கிராம சேவகர் தையிட்டியில் 8.5 ஏக்கருமாகவே

குறித்த நிலம் விடுவிக்கப்பட்டது. இதேநேரம் விசுவமடுப் பிரதேசத்திற்குள் அதிகளவு யாணைகள் ஊடுருவுவதனால் அதனை தடுப்பதற்கு ஏற்ற ஒழுங்கினை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. 

குறித்த பகுதியில் யாணைப் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்காக 5 மில்லியன் உடனடியாகவே விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு