யாழ்.உடுவில் பகுதியில் லொறி சாரதியை அச்சுறுத்தி லொறியை பறித்துச் சென்ற நபர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுவில் பகுதியில் லொறி சாரதியை அச்சுறுத்தி லொறியை பறித்துச் சென்ற நபர் கைது!

யாழ்.உடுவில் பகுதியில் லொறி சாரதியை அச்சுறுத்தி லொறியை பறித்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லொறி சாரதி லொறியை நிறுத்திவிட்டு தொலைபேசி அழைப்பை எடுத்துக்கொண்டிருந்தபோது அவ்விடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் சாரதியை பயமுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான முறைப்பாட்டின் பேரில் திருடப்பட்ட லொறியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரை மானிப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் 33 வயதுடைய ஆனைக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். மேலும், சந்தேக நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், 

மானிப்பாய் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு