பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியமை, கைது செய்தமைக்கு நீதிவேண்டும்..! வேலன் சுவாமிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்...

ஆசிரியர் - Editor I
பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியமை, கைது செய்தமைக்கு நீதிவேண்டும்..! வேலன் சுவாமிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்பாண விஜயத்தின்போது ஜனநாயக வழியில் எதிர்ப்பு போராட்டம் நடத்திய தம் மீது தவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அதற்காக கைது செய்யப்பட்டமைக்கு நீதிகோரி வேலன் சுவாமிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

ஜனநாயக வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட என் மீது வன்முறையை தூண்டியமை, அதிகளவு ஆட்களை கூட்டியமைபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை பொலிஸார் சுமத்தியுள்ளதுடன் அதற்காக கைது செய்துள்ளனர். எனவே இதற்கு நீதிகோரி நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு வழங்கியுள்ளேன். 

இதன்போது சட்டத்தரணி தவராசா மற்றும் ஆகியோர் உடனிருந்தனர். கடந்த வாரம் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு